நடிகர் விவேக் வசித்துவந்த பகுதியின் பிரதான சாலைக்கு அவரது பெயரை சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக அவர் வசித்துவந்த சென்னை பத்மாவதி நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு 'சின்ன கலைவாணர்சாலை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அண்மையில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தநடிகர் விவேக்கின் மனைவி இதுதொடர்பான கோரிக்கையைவைத்திருந்த நிலையில் தற்போது இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.