Skip to main content

தீப்பெட்டித் தொழிலை உரசும் சீன சிகரெட் லைட்டர்கள்! -தடை செய்ய அமைச்சரிடம் கோரிக்கை!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Chinese cigarette lighters sweep the match industry! -Request to the Minister to ban!

 

தீப்பெட்டியோ, பட்டாசோ சீனாவுடைய மூக்கு இந்தியா வரை தாராளமாகவே நீள்கிறது, அதுவும் சட்டவிரோதமாக. கோவில்பட்டி, தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும், சீன உற்பத்தியான பிளாஸ்டிக்காலான சிகரெட் லைட்டரால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகக் குமுறுகின்றனர். 

 

தென் தமிழகத்தில் தீப்பெட்டித் தொழில் எவ்வாறு தடம் பதித்தது என்று வரலாற்றைப் புரட்டினால், சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் போன்ற தொழில் பிதாமகன்கள், 1922-ல் கொல்கத்தா சென்று தீப்பெட்டித் தொழிலைக் கற்றுவந்து, வறட்சியால் விவசாயம் பொய்த்து வேலையில்லாமல் இருந்த  மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை அளித்ததெல்லாம் நடந்துள்ளது. 

 

நடப்பு விவகாரத்துக்கு வருவோம். விருதுநகர்,  தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில், கடந்த 80 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தீப்பெட்டித் தொழில் வாழ்வளித்து வருகிறது.  அதில் 90 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்களாக உள்ளனர். இந்தியாவின் 90 சதவீத தீப்பெட்டித் தேவையையும், உலக நாடுகளின் 40 சதவீத தீப்பெட்டித் தேவையையும், தமிழகத் தீப்பெட்டி நிறுவனங்கள்தான் பூர்த்திசெய்து வருகின்றன.

 

தற்போது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலான சிகரெட் லைட்டர்கள்  நூற்றுக்கணக்கான கண்டெய்னர்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டு, பல மாநிலங்களிலும் விற்பனையாகிறது. மியான்மர் வழியாக சட்டவிரோதமாகவும் கொண்டு வரப்படுகிறது. இது, தமிழகத் தீப்பெட்டித் தொழிலுக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது. 

 

Chinese cigarette lighters sweep the match industry! -Request to the Minister to ban!

 

இந்நிலையில், தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கலைஞர் ஆட்சிக் காலத்தில் சீனத் தீப்பெட்டிகளுக்குத் தடையைப் பெற்றுத் தந்ததை நன்றியோடு நினைவு கூர்கின்றனர். பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும்,  சீன லைட்டர்களுக்கு நிரந்தரத் தடையைப் பெற்றுத் தர வேண்டும் என, சாத்தூரில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். 

 

மனுவைப் பெற்றுக் கொண்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்., முதலமைச்சரின் கவனத்திற்கு அவர்களின் கோரிக்கையைக் கொண்டு செல்வதாகவும், முதலமைச்சரை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். 

 

சட்ட ரீதியான அழுத்தத்தால், சிபிஐ ஆய்வுகளால், ஒருபுறம் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு கடும் நெருக்கடியைத் தொழிலாளர்கள் சந்தித்துவரும் நிலையில், தீப்பெட்டித் தொழிலாளர்களின் பரிதவிப்பும் தென்மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ளன.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.