Skip to main content

பேச்சு வார்த்தை நிறைவு... விமான நிலையம் செல்கிறார் சீன அதிபர்...

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர்  ஜின்பிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  
 

xi jinping

 

 


இரவு உணவு விருந்து முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார் பிறகு அவரும் கோவளம் புறப்பட்டு சென்றார்.

இரண்டுவது நாளான இன்று சீன அதிபரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கோவளத்தில் சந்திக்க உள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் இரண்டாம் நாளான இன்று ஜின்பிங்கின் அட்டவணை வெளியாகியுள்ளது. 9:05 க்கு காலை ஹோட்டலில் இருந்து கிளம்ப வேண்டிய அதிபர் சற்று தாமதமாக கிளம்பி கோவளம் சென்றடைந்தார். மோடி அவரை வரவேற்று கோவளம் கடற்கரை ஹோட்டலில் இரண்டாவது நாள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். வர்த்தகம், ராணுவம், எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து மோடியும் ஜின்பிங்கும் ஆலோசிக்க வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது.

இரண்டு நாட்டு தலைவர்களும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோவளத்தில் உள்ள ஓட்டலில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. கண்ணாடி அறையில் இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசித்த நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தினார்கள் இருநாட்டு தலைவர்களும்.

இதனையடுத்து சீன அதிபர் ஜின்பிங் பேசும் போது, “நீங்கள் கூறியது போல், நீங்களும் நானும் நண்பர்கள், இருதரப்பு உறவுகள் குறித்த இருதய கலந்துரையாடல்கள் போன்ற நேர்மையான உரையாடல்களில் ஈடுபட்டோம். தமிழகத்தின் விருந்தோம்பலால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கிறோம். நானும் எனது சகாக்களும் அதை மிகவும் வலுவாக உணர்ந்திருக்கிறோம். இது எனக்கும் எங்களுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்” என கூறினார்.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், கோவளம் ஓட்டலில் தமிழத்தின் கைவினைப்பொருட்களை சீன அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி பார்வையிட்டனர். அப்போது தமிழர்களின் திறமையை வெளிப்படுத்தும் காஞ்சிப்பட்டில் ஷி ஜின்பிங் படத்தோடு தயாரான சால்வையை பிரதமர் மோடி - சீன அதிபருக்கு பரிசளித்தார். அதன்பின் ஜின்பிங் மோடி புகைப்படம் பொறித்த தட்டை மோடியிடம் பரிசாக கொடுத்தார்.

இதன்பின்னர் கோவளத்தில் இருந்து நேராக கிளம்பி விமான நிலையத்திற்கு செல்கிறார் ஜின்பிங். அங்கிருந்து நேபாள் செல்கிறார் சீன அதிபர் ஜின்பிங்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜி 20 உச்சி மாநாடு; சீன அதிபர் புறக்கணிப்பு?

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

G20 Summit Chinese president boycott

 

ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி 20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அதன்படி செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு வர உள்ளார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின், நாடு திரும்ப உள்ளார்.

 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதன் காரணமாக ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

மூன்றாவது முறையாக சீனாவின் அதிபரானார் ஜி ஜின்பிங்

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

Xi Jinping has been elected as President of China for the third term

 

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

சீன நாட்டின் அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற சட்ட விதி உள்ளது. ஆனால் அந்த விதியை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கினார். அதன் மூலம் ஒருவர் அவர் ஓய்வு பெறும் வரை அல்லது இறக்கும் வரை அதிபராக இருக்கலாம் என்ற புதிய விதி உருவாக்கப்பட்டது.

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஸீ ஸாங்க் ஷ்வான் என்பவரின் மகனான ஜி ஜின்பிங் 1953 ஆம் ஆண்டு பிறந்தார். அதன் பிறகு கட்சியில் இணைந்து பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்து வந்த ஜி.ஜின்பிங் 2013 ஆம் ஆண்டு சீனாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சீனாவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அத்தோடு சீனாவின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.  ஆனால் இது ஒரு புறம் இருக்க ஜி ஜின்பிங் ஆட்சியில் நடக்கும் குற்றங்கள் குறித்து வெளியே பேசுபவர்கள், அவருக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் செய்திகள் வெளி வந்தன. குறிப்பாக ஜி ஜின்பிங் குறித்து எந்த விதமான விமர்சனங்களும் வெளியே வராமல் பார்த்துக்கொள்வதாகவும்  ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இந்த நிலையில் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கிட்டதட்ட 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்ததாகவும், அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.