jkl

Advertisment

சிதம்பரம் ஊராட்சி சிவசக்திநகரில் குத்துசண்டை போல் கும்பூ தற்காப்பு கலையின் ஒருபிரிவான உஷூ தற்காப்பு கலையை 22 சிறுவயது மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் சிதம்பரத்தில் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிதம்பரம் பகுதியில் உஷூ தற்காப்பு கலையில் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாநில அளவில் 17 பேர் வெற்றி பெற்றவர்கள்.

இதனைதொடர்ந்து மாநில அளவிலான 18-வது உஷு போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 27,28 தேதிகளில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற 17 பேரும் கலந்துகொண்டனர். அதில் 29 கிலோ எடை பிரிவில் சிதம்பரம் ராமசாமி அரசு பள்ளி மாணவி செஹனாஸ் பாத்திமா தங்கம் பதக்கமும், 60 கிலோ எடை பிரிவில் புஞ்ச மகத்து வாழ்க்கை அரசு நடுநிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி சிவசர்மிலி வெள்ளி பதக்கமும், 32 கிலோ எடை பிரிவில் சிதம்பரம் நகராட்சி துவக்க பள்ளி 5-ம் வகுப்பு மாணவி பிரவினா வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர்.

மேலும் இப்போட்டியில் கடலூர் மாவட்டம் முதல் முறையாக தங்கம், வெள்ளி, வெங்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதனையறிந்த சிதம்பரம் நான்முனிசிபல் ஊராட்சி மன்ற தலைவர் பத்மசுந்தரி உமாநாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமாநாத் ஆகியோர் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு சந்தனமாலை மற்றும் சால்வை அனிவித்து கவுரவித்து மேலும் பல்வேறு விருதுகளை வாங்க வேண்டும் என வாழ்த்தினார்கள்.

Advertisment

இது வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் உஷூ தற்காப்பு கலையில் பயிற்சியாளர் சந்தன்ராஜ், செயலாளர் ரமேஷ். மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றிபெற்ற இவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வார்கள். அதில் தகுதி பெறுபவர்கள் உலகளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொண்டு உலக சாதனையாளர் விருதை பெறுவார்கள் என பயிற்சியாளர் தெரிவித்தார்.