childrens incident tamilnadu chief minister mk stalin announcement

குட்டையில் தவறி விழுந்து இறந்த இரண்டு சிறுமிகள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (15/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், செங்கனாவரம் கிராமத்தில் உள்ள பிச்சாங்குட்டையில் 14/07/2021 அன்று புதிய காலனி, மூதாகோயில் தெருவில் வசிக்கும் மணி என்பவரின் இளைய மகள் கீர்த்தி (வயது 9) மற்றும் ராஜீவ் காந்தி என்பவரின் இளைய மகள் கல்பனா (வயது 11) ஆகியோர் தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

Advertisment

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தச் சிறுமிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.