childrens incident madurai police investigation

மதுரையில் இறந்து போனதாக காப்பகத்தால் கூறப்பட்ட குழந்தை, ரூபாய் 5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

Advertisment

மதுரை மாவட்டத்தில் இதயம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் காப்பகத்தில் ஒரு வயது ஆண் குழந்தை இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 75 வயது முதியவரின் உடலை அடக்கம் செய்த ரசீதை, குழந்தையின் இறப்பு ஆவணமாக மாற்றியது தெரியவந்தது. ஆண் குழந்தை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபரிடம் ரூபாய் 5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த ஜூன் 13ஆம் தேதிமுதல் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தை மாணிக்கத்தை மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் மீட்டனர்.

அதேபோல், காப்பகத்தில் இருந்து ஸ்ரீதேவி என்ற பெண்ணின் இரண்டு வயது குழந்தை தனம்மாள் காணாமல் போனது. அந்தப் பெண் குழந்தை கருப்பாயூரணி அருகே கல்மேடு பகுதியில் உள்ள நபரிடம் விற்பனை செய்யப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பெண் குழந்தையை மீட்க கல்மேடு பகுதிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

முறைகேடு அம்பலமானதைத் தொடர்ந்து, காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள், பெரியோர் என அனைவரும் வேறு காப்பகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

"மதுரை தனியார் காப்பகத்தில் குழந்தைகள் காணாமல் போன விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.