Advertisment

இடையூறாக இருந்த குழந்தைகள் கொலை- உயிர்தப்பிய கணவன்! மனைவி தலைமறைவு! காதலன் கைது!

அபி

சென்னை போரூர் அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளை அகஸ்தீஸ்வரர் கோயில் தெருவைச்சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் அவரது மனைவி அபிராமி மற்றும் இவர்களூக்கு அஜய், கார்னிலாஎன்ற இரண்டு குழந்தைகள். விஜய் தனியார் வங்கியில் வீட்டு லோன் பிரிவில் வேலை செய்து வருகிறார். அபிராமியின் போக்கில்மாற்றம் ஏற்பட்டு பல ஆண் நண்பர்களுடன் பழக தொடங்கினார்.

Advertisment

Below image

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்த நிலையில் இன்று அதிகாலை வேலை முடித்து வீட்டுக்கு திரும்பி வந்த விஜய், கதவு வெளிப்புறமாக பூட்டு போடாமல் தாழிட்டிருந்ததை கண்டும், மேலும் அபிராமியின் இரு சக்கர வாகனத்தையும் காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தன் மனைவி அபிராமிக்கு பலமுறை போன்செய்தார். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததை அடுத்து , கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிபடிய சிறுவன் அஜய், சிறுமி கார்னிலா இருவரும் சடலமாக கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ், மற்றும் உதவி ஆய்வாளர் சாண்டியப்பன் பிரேதத்தை கைப்பற்றி விசாரணையைதொடங்கினர்.

ku

விசாரணையில் குன்றத்தூர் போரூர் நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி பேலஸ் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்திடம் அபிராமி நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்தது. சுந்தரத்தை கைது செய்து போலீஸ் பாணியில் விசாரித்ததில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தை மற்றும் கணவன் ஆகிய மூன்று பேரையும் கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்டபடி, நேற்று இரவு சுந்தரம் மூலம் விஷம் வாங்கி வரப்பட்டு தேனீர் மற்றும் உணவில் விஷத்தை கலந்து வைத்து அபிராமி தயாராக இருந்த நிலையில், கணவர் விஜய்க்கு அலுவலகத்தில் இரவு வேலை இருந்ததால் விஜய் வருவதாக இல்லை என்று செல்போனில் கூறியதால் இரண்டு குழந்தைகளூக்கு மட்டும் உணவில் விஷம் கலந்துகொடுத்துவிட்டார் அபிராமி. குழந்தைகள்இருவரும் துடிதுடித்து இறந்தபின்னர் யாருக்கும் தெரியாமல்நேற்று இரவே தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்குபேருந்தில் சென்றுவிட்டார்.

அபிராமி நாகர்கோவிலுக்கு போய் சேர்ந்தபின்னர் தங்களது திட்டபடி இருவரும் சேர்ந்து வாழ இங்குள்ள நிலவரத்தை கண்காணித்து விட்டு இருந்த சுந்தரத்தை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துவிட்டனர்.

தலைமறைவாக உள்ள அபிராமியை கைது செய்ய தனிப்படை நாகர்கோவிலுக்கு விரைந்துள்ளது.

child murder kundrathur abirami
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe