Skip to main content

இடையூறாக இருந்த குழந்தைகள் கொலை- உயிர்தப்பிய கணவன்! மனைவி தலைமறைவு! காதலன் கைது!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
அபி


சென்னை போரூர் அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளை அகஸ்தீஸ்வரர் கோயில் தெருவைச்சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் அவரது மனைவி அபிராமி மற்றும் இவர்களூக்கு அஜய், கார்னிலா என்ற இரண்டு குழந்தைகள்.   விஜய் தனியார் வங்கியில் வீட்டு லோன் பிரிவில் வேலை செய்து வருகிறார்.  அபிராமியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு பல ஆண் நண்பர்களுடன் பழக தொடங்கினார்.

 

Below image

 

 

 இந்த நிலையில் இன்று அதிகாலை வேலை முடித்து வீட்டுக்கு திரும்பி வந்த விஜய், கதவு வெளிப்புறமாக பூட்டு போடாமல் தாழிட்டிருந்ததை கண்டும்,  மேலும் அபிராமியின் இரு சக்கர வாகனத்தையும் காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தார்.  இதையடுத்து தன் மனைவி அபிராமிக்கு பலமுறை போன்செய்தார்.  போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததை அடுத்து ,  கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வாயில்  நுரை தள்ளிபடிய சிறுவன் அஜய், சிறுமி கார்னிலா இருவரும் சடலமாக கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.  இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.  உடனடியாக குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ்,  மற்றும் உதவி ஆய்வாளர் சாண்டியப்பன்   பிரேதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

 

ku

 

விசாரணையில் குன்றத்தூர் போரூர் நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி பேலஸ் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்திடம் அபிராமி நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்தது.  சுந்தரத்தை கைது செய்து போலீஸ் பாணியில் விசாரித்ததில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தை மற்றும் கணவன் ஆகிய மூன்று பேரையும் கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்டபடி,  நேற்று இரவு சுந்தரம் மூலம் விஷம் வாங்கி வரப்பட்டு தேனீர் மற்றும் உணவில் விஷத்தை கலந்து வைத்து அபிராமி தயாராக இருந்த நிலையில், கணவர் விஜய்க்கு அலுவலகத்தில் இரவு வேலை இருந்ததால் விஜய் வருவதாக இல்லை என்று செல்போனில் கூறியதால் இரண்டு குழந்தைகளூக்கு மட்டும் உணவில் விஷம் கலந்துகொடுத்துவிட்டார் அபிராமி.  குழந்தைகள்  இருவரும் துடிதுடித்து இறந்தபின்னர் யாருக்கும் தெரியாமல் நேற்று இரவே தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் சென்றுவிட்டார்.  

 

அபிராமி நாகர்கோவிலுக்கு போய் சேர்ந்தபின்னர் தங்களது திட்டபடி இருவரும் சேர்ந்து வாழ இங்குள்ள நிலவரத்தை கண்காணித்து விட்டு இருந்த சுந்தரத்தை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துவிட்டனர்.

தலைமறைவாக உள்ள அபிராமியை கைது செய்ய தனிப்படை நாகர்கோவிலுக்கு விரைந்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞர் படுகொலை; சினிமா பாணியில் சேசிங் - குற்றவாளிகளை சுற்றி வளைத்த போலீஸ் 

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Police arrested 6 people in the case of youth    in Kundrathur

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன்(50), இவரது மகன் நிஷாந்த்(25), லோடு வேன் ஓட்டி வந்தார். கடந்த புதன் கிழமை வீட்டின் அருகே அமர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் நிசாந்தை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்(24), அவரது தம்பி கவியரசு(22) மற்றும் இவர்களது நண்பர்கள் எனத் தெரிய வந்த நிலையில் கொலையாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து மாமல்லபுரம் பகுதியில் பதுங்கி இருந்தவர்களை இருசக்கர வாகனத்தில் சினிமா பட பாணியில் சேசிங் செய்து அஜித், கவியரசு, கார்த்திக் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஆண்டு அஜித் மற்றும் நிஷாந்த்க்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அஜித்தை நிஷாந்த் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் நிசாந்த் சிறைக்குச் சென்று வெளியே வந்த நிலையில், இருவருக்கும் இடையே பகையானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நிஷாந்தை கொலை செய்யத் திட்டம் தீட்டி தனியாக இருந்த நிஷாந்தை அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு அன்றைய இரவு சோமங்கலத்தில் உள்ள காட்டில் பதுங்கி உள்ளனர். பின்னர் அதிகாலையில் எழுந்து மாமல்லபுரம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். 

தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தபோது, நீதிமன்றத்தில் சரண் அடையச் செல்வது தெரிய வந்த நிலையில் போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாகத் தப்பிச் செல்ல முயன்றனர். சினிமா பட பாணியில் போலீசார் சேசிங் செய்து அவர்களை அங்கேயே மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அஜித் அவரது தம்பி கவியரசு இவர்களது அண்ணன் தியாகராஜன், நண்பர்கள் கார்த்திக் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏரியாவில் யார் பெரிய ஆளாக வலம் வருவது மற்றும் இருவருக்கும் இடையேயான முன் விரோதம் ஆகியவற்றால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதும், இந்த கொலை சம்பவத்தில் ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பிகள் மற்றும் அவர்களது நண்பர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் பிடிக்கும்போது தப்பி ஓடியதில் அஜித், கார்த்திக் உள்ளிட்ட நான்கு பேருக்கு கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

நிலம் வரன்முறைக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம்; நகராட்சி அலுவலகத்தில் முகாமிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
 25 thousand bribe to demarcate land; The anti-bribery department camped at the municipal office

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கலைச்செல்வன் தலைமையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. பெருங்குடி பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் நிலம் வரன்முறை செய்ய குன்றத்தூர் நகராட்சியை அணுகியபோது சிலர் ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் முனுசாமி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் நகராட்சி கமிஷனர் குமாரி மற்றும் பாலசுப்ரமணியன், ஊழியர் சாம்சன் ஆகிய மூன்று பேரையும் பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வாங்கிய ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பல மணிநேரங்களாக சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.