Advertisment

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை; இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

children incident police pocso act in salem

சேலம் அருகே, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்று இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisment

சேலம் அருகே உள்ள காரிப்பட்டி நேரு நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த வீரா (வயது 28) என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சிறுமியிடம் திருமணம் ஆசை காட்டி, வீட்டில் இருந்து கடத்திச் சென்றுள்ளார்.

Advertisment

வீரா தனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டில் வைத்து சிறுமியுடன் இரண்டு நாட்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் சிறுமியை அவருடைய பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் தனலட்சுமி நடத்திய விசாரணையில், சிறுமியைக் கடத்திச் சென்ற வீரா, அவளை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டது.

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் வீராவை ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் மத்திய சிறையில் அடைத்தனர்.

police incident Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe