children incident police investigation

Advertisment

கும்பகோணத்தில் நான்கு வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், தமது நான்கு வயது குழந்தையான கோபிகாவை தங்கையின் வீட்டில் விட்டுள்ளார். கோபிகா நான்காவது மாடியின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.