children incident pocso act police in salem district

Advertisment

சேலத்தில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 60 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், சிவதாபுரம் அருகே உள்ள செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). பள்ளியில் படித்து வரும் இவருடைய பேத்திக்கு ஜூன் 6- ஆம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடினர். இதையடுத்து பேத்தியுடன் ஒன்றாக படித்து வரும் 11 வயது சிறுமி, பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தாள்.

அப்போது, குடிபோதையில் இருந்த ஜெயராமன், அந்தச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி, தனது தாய்மாமனிடம் அழுது கொண்டே கூறியிருக்கிறாள்.

Advertisment

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.