children incident mother and her sons police arrested salem central prison

பர்கூர் அருகே, முன்விரோதம் காரணமாக சிறுவனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தவழக்கில் தாய், இரண்டு மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள எலத்தகிரி ராம் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர்பாலேப்பள்ளி ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன்முருகேசன் (வயது 17).

Advertisment

இவர், 9- ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, மேற்கொண்டு படிக்க விரும்பாததால் வீட்டில் இருந்து வந்தார். முருகேசனின் தாயார் மங்கம்மாள், தன் தந்தையுடன் கோபித்துக் கொண்டு 7 மாதங்களுக்கு முன்புபிரிந்து சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

தனது தாய்க்கும் தந்தைக்கும் சண்டை ஏற்பட்டு, தாய் பிரிந்து செல்வதற்கு எதிர் வீட்டில் வசிக்கும்டெம்போ ஓட்டுநரான பிரபு (வயது 27) என்பவரும், அவருடைய குடும்பத்தினரும்தான் காரணம் என முருகேசன் கருதினார்.

Advertisment

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரபுவின் தந்தை ராஜா இறந்தார். அதற்கு

முருகேசன் குடும்பத்தினர்தான் காரணம் என பிரபு குடும்பத்தினர் கருதினர். இதனால் இரு

குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஆக. 17- ஆம் தேதி இரவு, ராம் நகரில் சாலையில் முருகேசன் நடந்து சென்று கொண்டிருந்தபோது பிரபு வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தணியாத பிரபு, அவர் மீது கல்லை போட்டுகொலை செய்துள்ளார்.

இதையறிந்த பிரபுவின் அண்ணன் திருப்பதி (வயது 32), தாயார் பொட்டு அம்மாள் (வயது 55) ஆகியோர் சடலத்தை அருகில் உள்ள வயல்வெளியில் தூக்கி வீசிவிட்டு வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக பிரபு மற்றும் அவருடைய அண்ணன், தாயார் ஆகியமூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், பிரபுவையும், திருப்பதியையும் சேலம் மத்தியசிறையிலும், தாயாரை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர்.