/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parama434.jpg)
அரசு மருத்துவமனையின் கழிவறையில் ஏழு மாத குறைப் பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை சடலம்மீட்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையைத் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஏழு மாத குறைப் பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை இறந்து கடந்ததைக் கண்டு தலைமை மருத்துவர் முத்தரசனிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு வந்து பார்த்த தலைமை மருத்துவர், தொடர்ந்து மருத்துவமனையில் தங்கியிருக்கும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்.
அந்த குழந்தை யாருடையது? என தெரியாத நிலையில், காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)