/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judge444_0.jpg)
சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்புவழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் 14 வயதான சிறுவனை ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கோட்டுவேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு, ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் இன்று (03/02/2021) தீர்ப்பளித்துள்ளது, அந்தத்தீர்ப்பில், செங்கோட்டுவேல் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூபாய் 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)