children incident court judgement in nellai district

Advertisment

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டியன் என்ற இளைஞர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த 2017- ஆம் ஆண்டு அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இசக்கிபாண்டியன் குற்றவாளி என்று நீதிமன்ற நீதிபதி அன்பு செல்வி தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து, தண்டனை விவரங்களையும் நீதிபதி அறிவித்துள்ளார்.

Advertisment

அதன்படி, இசக்கி பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.