Published on 09/08/2022 | Edited on 09/08/2022

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இனிப்புக் கடை அதிபரின் பெண் குழந்தையைக் கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி, தேனி உள்ளிட்ட இடங்களில் இனிப்புக் கடை நடத்தி வரும் பார்த்தசாரதி- சத்யா தம்பதிக்கு நான்கு வயது ஜன்னி என்ற பெண் குழந்தை உள்ளது. விடுமுறை தினம் என்பதால் பாட்டி வீட்டில் விடப்பட்டிருந்த குழந்தையை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர்.
தகவலறிந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில், வந்த ஒரு தம்பதியை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் குழந்தை ஒன்று இருந்தது; அந்த குழந்தைதான் கடத்தப்பட்ட குழந்தை ஜனனி என்பதைக் கண்டறிந்த உசிலம்பட்டி காவல்துறையினர், தம்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.