Skip to main content

பள்ளி செல்லா குழந்தைகளை நக்கீரன் முயற்சியால் பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

Children go to school at the behest of Nakkeeran  Officers enrolled in the school!

 

கடந்த மாதம் முதல் பள்ளி செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணியில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள எல்.என்.புரம் ஊராட்சி சுக்கிரன்குண்டு பகுதியில் குளக்கரையோரம் வசிக்கும் குடும்பங்களில் ஏராளமான பள்ளி வயது குழந்தைகள் உள்ளனர். அவர்களில் பலர் பள்ளிக்குச் செல்லவில்லை. சிலர் தங்கள் குழந்தைகளைக் கூலிக்கு ஆடு மேய்க்க அனுப்பியுள்ளனர். அந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேற்று (24/08/2021) கொண்டு சென்றோம்.

Children go to school at the behest of Nakkeeran  Officers enrolled in the school!

 

நமது கோரிக்கை குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் ஆகியோர் சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ. அலுவலர்களிடம் உடனடியாக சுக்கிரன்குண்டு கிராமத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர்.

 

இந்த உத்தரவையடுத்து இன்று (25/08/2021) காலை எஸ்.எஸ்.ஏ. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், வட்டாரக் கண்காணிப்பாளர் செல்வராசு, வட்டாரக் கல்வி அலுவலர் மலர்விழி மற்றும் எல்.என்.புரம், பட்டிபுஞ்சை, காசிம்புதுப்பேட்டை, புளிச்சங்காடு, கரம்பக்காடு பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சுக்கிரன்குண்டு கிராமத்தில் வீடு வீடாக சென்று, பள்ளி வயது குழந்தைகள் பற்றிய விபரங்களை சேகரித்து, உடனே பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தியதுடன் பல மாணவ, மாணவிகளை அதிகாரிகளே அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தனர். மேலும், ஆடு மேய்க்கச் சென்றுள்ள மாணவர்களையும் மீட்டு பள்ளியில் சேர்ப்போம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

 

சுக்கிரன்குண்டு கிராம மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து காசிம்புதுப்பேட்டை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசீர்அலி மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதே பகுதியில் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல வசதியில்லாமல் இருந்த ஒரு மாணவியின் கல்லூரி படிப்பிற்கு பசீர் அலி உதவிகள் செய்வதாகக் கூறினார்.

Children go to school at the behest of Nakkeeran  Officers enrolled in the school!

 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "50 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறோம். பல பேருக்கு வீட்டுமனைப் பட்டா, வீடு இல்லை. குளத்துக்கரையில்தான் குடியிருக்கிறோம். அதனால் ரேசன் கார்டு இல்லை. அதனால தினமும் கூலி வேலைக்குப் போனால்தான் சாப்பிட முடியும். எங்களுக்கு வீடுகட்ட இடம் கொடுக்க வேண்டுமென்று பல வருடமாகக் கேட்கிறோம்; யாரும் கண்டுகொள்ளவில்லை" என்றனர்.

 

நக்கீரன் கோரிக்கையால் பல மாணவர்கள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றிகள். இதேபோல அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைக்காடு மேற்கு புதுக்குடியிருப்பு பகுதியிலும் பள்ளி வயது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதையும் அதிகாரிகள் கவனித்தால் நல்லது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.