Advertisment

சிறைச்சாலைக்கு புத்தகங்கள் வழங்கிய குழந்தைகள்

Children who donate books to prisons

Advertisment

திண்டுக்கல் மாவட்ட சிறையில் சிறைத்துறை தலைவர், மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் மற்றும் மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டு அலுவலர் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட சிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் சிறைவாசிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தி, அவர்களை சீர்திருத்திக் கொள்ளும் நோக்கில் "கூண்டுக்குள் வானம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் பங்களிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட சிறையில் புத்தக தான பெட்டி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisment

அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட சிறையில் ராணுவ வீரர் ஜேம்ஸ் மில்டனின் குழந்தைகள் நான்காம் வகுப்பு படிக்கும் ரெமோ மில்டன் மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஸ்டாரியா தாங்கள் சேர்த்து வைத்த சேமிப்பு பணத்தில் சுமார் நூறு புத்தகங்களை இன்று மாவட்ட சிறை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் வழங்கினர். உடன் தன்னார்வலர் பால் தாமஸ் மற்றும் சிறைத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்கள் பங்களிப்பை தாராளமாகச் செலுத்த வேண்டும் என மாவட்ட சிறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

books police Prison
இதையும் படியுங்கள்
Subscribe