வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த அம்பலூர் அருகே கொடையஞ்சி என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் துண்டுக் கல்வெட்டு ஒன்றைக் அக்கிராம சிறார்கள்தான் கண்டுபிடித்துள்ளனர். அதனை கல்லூரி மாணவர்கள் பார்த்துள்ளனர். இதுப்பற்றி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபுவிடம் தெரிவித்துள்ளார்கள். அந்த தகவலை அடிப்படையாக கொண்டு வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் அங்கு சென்று கல்வெட்டை ஆய்வு செய்துள்ளனர்.

Children discover the Inscription landmark

Advertisment

Advertisment

அந்த கல்வெட்டு ஆய்வு குறித்து, முனைவர் ஆ.பிரபு, பாலாற்றங்கரையில் உள்ள கொடையாஞ்சி கிராமத்தின் பழைய பெயர் ‘கொடைகாசி’ என அழைக்கப்பட்டதாகத் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. காலப்போக்கில் கொடைகாஞ்சி என்றும் பின்பு கொடையாஞ்சி என்றும் மாற்றம் பெற்றுள்ளது. இவ்வூரின் பெயருக்கும் இங்குள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கும் தொடர்பு இருப்பதாக ஊர் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.

3 X 3 அடி அளவுள்ள கல்வெட்டினைச் சுத்தம் செய்து படியெடுத்து படித்தோம். 12 வரிகள் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. கல்வெட்டு எழுத்துக்கள் ஆங்காங்கே சிதைந்திருப்பதாலும் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது.

பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு “மங்கலச் சொல், அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கொடையானது நிலமாக இருப்பின் அதன் நான்கு எல்லைகள், பொன் என்றால் அதன் அளவு ஆகியவை இடம்பெறும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கட்வெட்டு ஒரு தொல்லியல் அடையாளம் என்பதால் இதுபோன்ற ஆவணங்களை முறையாகப் பாதுகாப்பதன் அவசியத்தை அவ்வூர் மக்களுக்கு உணர்த்தியுள்ளோம் என்றார்.

இக்கல்வெட்டினை ஆய்வு செய்த முன்னாள் தொல்லியல்துறை உதவி இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றன், ஒருவரிடம் இருந்த நிலத்தைப் பொன் கொடுத்து வாங்கி அதை கோவிலுக்கு கொடையாக அளித்த செய்தியை இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர். இக்கல்வெட்டில் அந்த நிலத்தின் எல்லைகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன என்கிறார்.