Published on 14/11/2021 | Edited on 14/11/2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14/11/2021) வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியில், "குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள், ஒளிச்சுடர்கள்!
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்! குழந்தைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப் பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்!
குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டு மொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல், உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.