childbirth seen by nurses; Twins and maternal mortality

மருத்துவர்கள்மருத்துவமனையில் இல்லாததால் மருத்துவமனை செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் தாய் மற்றும் இரட்டைக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் அருகே கோடம்பாடி பகுதியைச்சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவியின் பெயர் பவித்ரா. 26 வயதான பவித்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இரட்டைக் குழந்தைகள் வயிற்றில் இருந்ததால் அதற்கேற்றவாறு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டதால் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பவித்ராவுக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்ததால் பவித்ராவினை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள்மருத்துவமனையில் இல்லாததால் பவித்ராவிற்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

பிறந்த இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் தாய் பவித்ராவும் உயிரிழந்தார். தகவலைக் கேள்விப்பட்ட உறவினர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், உடல்களைப்பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.