Advertisment

மனைவிக்கு பிரசவம்  பார்த்த கணவன்!  தேனியில் பரபரப்பு!!

the

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியில் இருக்கும் கோடாங்கிபட்டியில் உள்ள தென்றல் நகரில் வசித்துவருகிறார் கண்ணன். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவருடைய மனைவி மகாலெட்சுமிக்கு தான் வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்ப்பிணியாக இருந்து வந்த கண்ணனின் மனைவி மகாலட்சுமிக்கு நேற்று இரவு திடீரென இடுப்பு வலி ஏற்படவே தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இந்த விஷயம் அப்பகுதியில் உள்ள மக்கள் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரியவே பதறி போன நர்ஸ் கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், இணை இயக்குனர் மாவட்ட பொது சுகாதாரம் உட்பட மொத்த மருத்துவக் குழுவுக்கும் தகவல் கொடுத்ததின் பேரில் மருத்துவ குழுவே கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டனர்.

Advertisment

இதுசம்பந்தமாக சுகாதாரத்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் கேட்ட போது.... கண்ணன் தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இந்த தகவல் கிடைத்ததின் பேரில் சம்ப இடத்திற்கு விரைந்து சென்றோம். ஆனால், தாய் மற்றும் சேயை பரிசோதிக்க கண்ணன் மருத்துவ குழுவை அனுமதிக்கவில்லை. நேரம் போக போக எங்களுடன் கண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்ட ஆரம்பித்தார். அதன் பின் வருவாய்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காமல் இருப்பதை கண்டறிந்து, தொப்புள் கொடியை மட்டுமாவது அறுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அப்போது கூட அலோபதி மருத்துவர்கள் வந்தால் நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். உடனே சித்த மருத்துவர்கள் குழுவை வைத்து குழந்தைக்கு தொப்புள் கொடி அறுத்தோம். அதற்கு மேல் எங்களால் எந்த பரிசோதனைகளையும் அவர் செய்ய விடவில்லை. இது என் வீடு, என் மனைவி, என் குழந்தை, நீங்கள் புறப்படுங்கள் என்று கடுமையாக சத்தம் போட்டார் என்று கூறினார்.

அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் பார்ப்பது சாதாரண விசயமாக இருந்தது. பாட்டி மார்களின் பெரும் வேலையாகவே பிரசவம் பார்ப்பது இருந்தது. கூடவே, ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டுவந்தார்கள். அதனால் சுகப்பிரசவம் எளிதான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் சுகப்பிரசவம் என்பதே சரியாக இருக்கும். இப்போது கூட தாய், சேய் இருவருக்குமான அடிப்படை பரிசோதனைகள் கூட செய்ய முடியாத சூழல் உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய், சேய்க்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.

வீட்டிலேயே மருத்துவ குழுவை பரிசோதிக்க அனுமதிக்கலாமே என்று கண்ணனிடம் கேட்ட போது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் தானே. என் மனைவியும் குழந்தையும் ஆரோக்கியமாக தானே இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எதற்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுனால மருத்துவ குழுவும் தொடர்ந்து கண்ணனிடம் பேசி தாயையும், சேயையும்பரிசோதனைக்கு அனுப்ப வலியுறுத்தி வருகிறார்கள்.

birth Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe