A child who went with his father to call his brother; An unexpected tragedy!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து கீரனூர் நோக்கி கே6 என்ற அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து ஒடுக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

Advertisment

இதனால் பேருந்தில் பயணித்த பயணிகளில் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கீரனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அதேபோல் கரூரில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர். தந்தை சரவணன் பள்ளியில் இருந்து தனது மூத்த மகனை அழைத்து வர தனது ஒன்றரை வயது குழந்தையுடன் சென்ற நிலையில், பள்ளி பேருந்தின் குறுக்கே குழந்தை ஓடியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.