
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்த நிலையில், பல இடங்களில்மழைநீர் தேங்கியுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக காசி தியேட்டரில் இருந்து அசோக் நகர் மெட்ரோ வரை 500 மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகாலின் முழு பகுதியும் சேதமடைந்து மழைநீர் தேங்கி நின்றது. இந்நிலையில் கே.கே நகர் பகுதி மக்கள், அந்த வடிகால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில், 5 வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்ததாகவும் பின்னர் அருகிலிருந்தவர்கள் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக அரசு அந்த மழைநீர் வடிகாலை முடித்து சீர்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)