Advertisment

கண் இமைக்கும் நேரத்தில் கால்வாயில் தவறி விழுந்த குழந்தை! 

The child who fell into the canal in the blink of an eye!

தந்தை கண் எதிரே மூன்று வயது குழந்தை கழிவுநீர் கால்வாயில் விழுந்தபதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, கால்வாய்கள் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எள்ளுப்பாறை பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர், மூன்று வயது மகள் மித்ராவை இரு சக்கர வாகனத்தில் இருந்து வீட்டின் அருகே இறக்கிவிட்டுள்ளார்.

Advertisment

அப்போது கால் தடுமாறிய குழந்தை மித்ரா கண் இமைக்கும் நேரத்தில் திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். உடனடியாக விவேக்கும் கழிவுநீர் கால்வாயில் குதித்து குழந்தையைத் தூக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் திறந்தவெளியில் இருந்த கால்வாய்கள் மூடப்பட்டன.

இது குறித்த நெஞ்சைப் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

children incident ranipet Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe