Advertisment

டிராக்டரில் சிக்கிய குழந்தை; தந்தையின் அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம்

A child trapped in a tractor; a child who lost their live due to his father's negligence

திருவள்ளூரில் தந்தை ஓட்டிய டிராக்டரில் மகனே சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காட்டில் உள்ள நெமிலி இருளர் காலனியைச் சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஜெய்கிருஷ்ணன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை இருந்தது. தந்தை விஜய் அந்தப் பகுதியில் தினக்கூலிக்கு டிராக்டர் ஓட்டி வந்தார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டின்அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை விஜய் எடுத்தார். அப்பொழுது டிராக்டரின் பின்னால் ஜெய்கிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருந்தான். இதை அறியாமல் தந்தை விஜய் டிராக்டரை நகர்த்தியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை ஜெய்கிருஷ்ணன் உயிரிழந்தான். தன் கண்முன்னே குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது கண்டு விஜய் கதறி அழுதார்.

தொடர்ந்து கனகம்மாசத்திரம் போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை வைத்திருந்த ட்ராக்டரே மகனின் உயிரைப் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

police thiruvallur child tractor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe