Advertisment

குழந்தை விற்பனை- காரைக்காலில் 10 பேர் கைது

child

காரைக்காலில் குழந்தை விற்பனை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

காரைக்கால் திருநள்ளாறு கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருடைய மகனுக்கு திருமணம் நிகழ்ந்து10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் மகன் வேலை செய்துவரும் நிலையில் வீட்டுக்கு அனுப்பும் பணத்தை சேர்த்து வைத்து கடந்த 10 நாட்களுக்கு பிறந்து பத்து நாட்களே ஆன பெண் குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு லட்சுமி வாங்கி மருமகளிடம் கொடுத்து வளர்க்க சொல்லியுள்ளார்.

Advertisment

திடீரென லட்சுமி வீட்டில் பெண் குழந்தை இருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருநள்ளாறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் லட்சுமி வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். லட்சுமி மற்றும் அவருடைய மருமகள் ஆகியோர் பெண் குழந்தை தங்களுடைய குழந்தை என பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம்காட்டியுள்ளனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என்று தெரிய வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த நஃபியா பேகம் என்பவர் மூலம் குழந்தையை வாங்கியது தெரியவந்தது. அதேபோல அரசு மருத்துவமனை ஊழியர் பஞ்சமூர்த்தி என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்ததும் தெரிய வந்தது. ஏஜென்ட்களாக செயல்பட்டவர்கள், நகராட்சி ஊழியர் சந்திரசேகர், அவருடைய நண்பர்கள் ஆல்பர்ட், வினோத், லட்சுமி அவரது கணவர் சதாசிவம் என மொத்தம் பத்து பேரை திருநள்ளாறு போலீசார் குழந்தை விற்பனை மற்றும் போலி சான்றிதழ் தொடர்பாக கைது செய்துள்ளனர்.

Investigation Child Care police Karaikal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe