Advertisment

வெளிமாநிலங்களுக்கும் குழந்தைகள் விற்பனை... ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் பெங்களூரை சேர்ந்த பெண் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி, சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் அமுதவல்லி உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

 Child sales to other states... Bangalore girl arrested in rasipuram child sales case

இந்நிலையில் மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ரேகா என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை இங்கு வாங்கி பெங்களூர் போன்ற வெளிநகரங்களிலும் விற்கப்பட்டதாக விசாரணையில் தெரியவர அந்த விசாரணையின் அடிப்படையில் ரேகாவை தற்போது சிபிசிஐடி போலீசார்கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்த விவகாரத்தில் குழந்தைகள் தமிழகத்தில் மட்டுமல்ல இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும் விற்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

arrest CBCID child rasipuram sales
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe