A child purchased with an advance; incident in Chennai

பிறந்து எட்டு நாட்களே ஆன ஆண் குழந்தை விற்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநரான சத்தியதாஸ். இவருடைய மனைவி ஷியாமளா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக ஷியாமளா கருவுற்றிருந்தார். இந்நிலையில் மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் தன்னிடம் கொடுத்து விடுமாறு சத்யதாஸுடைய நண்பர் கணேஷ் கேட்டுள்ளார். அதனடிப்படையில் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே 25 ஆயிரம் ரூபாயை முன்தொகையாக சத்தியதாஸ்-ஷியாமளா தம்பதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆண் குழந்தை பிரிந்த நிலையில் எட்டு நாட்களே ஆன நிலையில் மீதிதொகையைப் பெற்றுக்கொண்டு குழந்தையை கணேஷ்-சரண்யா தம்பதிக்கு கொடுத்துள்ளனர். ஆனால் இரண்டு பெண் குழந்தைகள் இருந்த தங்களுக்குமூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை பிரிய மனம் இல்லை என தாய் ஷியாமளா, கணேஷ் தம்பதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது தெரியவந்தது. பிறந்து எட்டு நாட்களே ஆன ஆண் குழந்தை 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.