வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Child playing in front of house dies mysteriously - police investigating

தென்காசியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் புனித தம்பதி. இவர்களுடைய இரண்டரை வயது குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென திடீரென குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக உறவினர்கள் குழந்தையை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் குடும்பத்தினரும் மற்றும் உறவினரும் அதிர்ச்சியடைந்தனர். மர்மமான முறையில் இரண்டரை வயது குழந்தை உடலை பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து குருவிகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Child Care police thenkasi
இதையும் படியுங்கள்
Subscribe