Advertisment

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு...!

child passes away in vilupuram

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் கதிரவன் 14வயது. இவரது தந்தை மாசிலாமணி சென்னையில் மினி சரக்கு வேன் ஓட்டிவருகிறார். அவருடைய மனைவியும் அவருடனேயே சென்னையில் தங்கி உள்ளார். இவர்களது மகன் கதிரவன் தனது தம்பியுடன் நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்திலுள்ள தாத்தா வீட்டில் வங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவர், அவரது வீட்டை புதுப்பிக்கும் பணி செய்து வந்திருக்கிறார். அதை மாணவன் கதிரவன் அந்த வீட்டின் அருகில் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஏற்கனவே பெய்த மழையால் ஊறிப் போயிருந்த அந்த வீட்டின் 10 அடி உயர சுவர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கதிரவன் மீது அந்த சுவர் விழுந்துள்ளது. சுவரின் இடிபாடுகளில் சிக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். தகவலறிந்த நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe