Child passed away of suffocation after eating biscuits with tea

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜ கண்டிகை கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் - அமலு தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஹரிகிருஷ்ணன் கூலி தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதியின் 3 வயதுக் குழந்தை வெங்கடலட்சுமி. இந்த நிலையில் குழந்தை வெங்கடலட்சுமிக்கு நேற்று காலை விட்டில் டீயுடன் சேர்த்து பிஸ்கட் சேர்த்துக் கொடுத்துள்ளனர்.

அப்போது குழந்தைக்கு புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குக் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேதப்பரிசோதனைக்காகக் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.