Advertisment

வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை பலி; சீர்காழி சோகம்

A child Passed away after falling down the drain!

Advertisment

சீர்காழி அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எருக்கூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகள் அச்சுதா(5).அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். அச்சுதா வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் வாசலில் உள்ள வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். குழந்தையைக் காணாமல் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கதவணையில் குழந்தை மிதப்பது தெரியவந்தது. குழந்தையை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர்.

இதனையடுத்து குழந்தை அச்சுதாவின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்தசுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினர். தண்ணீரில் தவறி விழுந்த குழந்தையின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார் தமிழக முதல்வர்.

tragedy child Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe