child marriage youth pocso act police arrested

Advertisment

கருமந்துறை அருகே, மலைக்கிராம சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச்சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள நெரிஞ்சிநாட்டான் வலவு பகுதியைச் சேர்ந்தவர் கனிஷ்கா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை, கருமந்துறை கிழாக்காட்டைச் சேர்ந்த ஆண்டி மகன் ஆனந்தகுமார் (வயது 22) என்பவர் காதலித்து வந்தார்.

கடந்த 6- ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் திருமண ஆசை காட்டி, கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருமந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகார், வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

Advertisment

இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் கடத்திச்சென்ற சிறுமியும் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.