Child marriage pocso act

Advertisment

கோவை சரவணம்பட்டி பகுதியில், பெற்றோருடன் வசித்து வரும் 15 வயது சிறுமியை, அவரது பெற்றோர் திண்டுக்கல்லில் வசித்து வரும்வெல்டிங் தொழிலாளியான,பழநி என்பவருவருக்குக் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுமி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சிறுமியின் இன்னொரு உறவினர் ஒருவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு உதவியாகச் சிறுமி மருத்துவமனைக்குச் சென்றார். அதே மருத்துவமனையில் முத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞரான லாரி ஓட்டுனர் சிவா, விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது சிறுமிக்கும் சிவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இருவரும் தங்களது செல்ஃபோன் எண்களைப் பரிமாறிக் கொண்டனர். மருத்துவமனையை விட்டு வெளியே வந்த பின்னர், இருவரும் அவ்வப்போது செல்ஃபோனில் பேசியும் நேரில் சந்தித்தும் வந்துள்ளனர்.

இந்த விவகாரம் சிறுமியின் கணவருக்குத் தெரிந்து, அவர் சிறுமியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்த சிறுமி, அங்கு பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் திடீரென மாயமானார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் தனிப்படை அமைத்துச் சிறுமியைத் தேடி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், சிறுமி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைஅடுத்த மச்சூர் பகுதியில் இருப்பதாகக்கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர், சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.

nkn

சிறுமியைக் கடத்திச் சென்ற லாரி ஓட்டுனர் சிவா, அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சிறுமிக்கு 17 வயது என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமிக்கு 15 வயதில் திருமணம் செய்துவைத்த அவரது தாய், தந்தை,கணவர்மற்றும் கணவரின் தாய் ஆகியோர் மீது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறுமியைக் கடத்திச் சென்று இரண்டாவது திருமணம் செய்த சிவா மற்றும் சிறுமியின் கணவர் ஆகிய இருவரையும்,காவல்துறையினர்'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.