Child marriage in Mylapore; Summons to parents

Advertisment

சென்னை மயிலாப்பூரில் பெற்றோர்கள் சிறார்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாப்பூரில் வசித்து வந்த 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் பெற்றோர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதாவுக்கு புகார் கிடைத்தது. புகாரின் அடிப்படையில் அங்கு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தை திருமணம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டு சிறார்களையும் மீட்ட காவல்துறையினர் அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்ததோடு, குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். மேலும் இரண்டு சிறார்களின் பெற்றோர்களும் இது குறித்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.