child marriage men arrested

விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. ஆனால் இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் சக்திவேல் தனது உறவினர்களின் ஆலோசனையின்படி தனது விருப்பப்படி விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 26ஆம் தேதி விழுப்புரம் அருகில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் சக்திவேல். இதை ஏற்றுக்கொள்ளாத அந்த சிறுமி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, உரிய விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த சக்திவேல் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை தனபால், தாய் லட்சுமி, தம்பி ஆறுமுகம் அவரது மனைவி தேன்மொழி அவர் தங்கை, தாய்மாமன் சீனிவாசன் அவரது மனைவி அஞ்சுலட்சுமி உட்பட 9 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சக்திவேல், சீனிவாசன், அஞ்சுலட்சுமி ஆகிய மூவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆறு பேரை மகளிர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment