Child marriage- 3 people including Dikshitars of Nataraja temple

Advertisment

சிதம்பரம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சோமசேகர் தீட்சிதர். இவர் நடராஜர் கோவில் தீட்சிதர்களில் ஒருவர். இவரது 14 வயது மகள் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது நடராஜர் கோவில் தீட்சிதர், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, கடலூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர். அதன் பேரில் திருமணமான சிறுமி, மற்றும் அவரது தந்தையை புதன்கிழமை மாலை கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு காவல்துறையினர் கடலூருக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அந்த சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒத்துக் கொண்டனார். இதையடுத்து இது குறித்து சமூக நலத்துறையின் மகளிர் ஊர் நல அலுவலர் தவமணி வியாழக்கிழமை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

Advertisment

அதில் சிதம்பரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. சிறுமி தனக்கு நடந்த திருமணத்தை ஒப்புக் கொண்டதால், குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர் (41), சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சிதர் (24), மற்றும் அவரது தந்தை கணபதி தீட்சிதர்(42) ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இதனையெடுத்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சோமசேகர் தீட்சிதர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எந்த சட்டத்திற்கும் கட்டுபடாமல் ஆரம்ப காலத்திலிருந்து குழந்தை திருமணங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆதரத்துடன் புகார் கொடுத்ததால் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தீட்சிதர்கள் குடும்பத்தில் அனைவரும் குழந்தை திருமணம் செய்தவர்களே எனவே இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.