Advertisment

குழந்தை தொழிலாளர்கள்: பருத்தி காட்டில் 4 சிறுமிகள் மீட்பு!

Child labor: 4 girls rescued in cotton forest!

சேலம் தொழிலாளர்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில், உதவி ஆணையர் முத்து மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், ஆகியோர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர், அம்மன் நகர், பாரதி நகர், வரகூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பருத்தி தோட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளார்களாஎன ஆய்வு நடத்தினர்.

Advertisment

இதில், அப்பகுதியில் உள்ள ஒரு பருத்தித் தோட்டத்தில் 17 வயதான நான்கு சிறுமிகள் வேலை செய்வது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் நான்கு பேரும் மீட்கப்பட்டு, சேலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

குழந்தைதொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியதாக சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Officers Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe