/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_279.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடியைச் சேர்ந்தவர் நிரள்யா (வயது 14, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). அப்பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். பர்கூர் அருகே உள்ள முனமடுவு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவா (26). இவரும், அந்தச் சிறுமியும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.
சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைக் கூறிய சிவா, அவருடன் கடந்த சில மாதங்களாக தனிமையில் இருந்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுமியின் உடல்நிலை பாதிப்பு அடைந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உறவினர்கள் சிறுமியின் பெற்றோருக்குத்தகவல் அளித்தனர். மகளின் நிலைமையை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மகளிடம் விசாரித்தபோது, அவரும் சிவாவும் காதலித்து வந்ததும், அதனால் ஏற்பட்ட நெருக்கத்தில் கர்ப்பமுற்றதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரித்த காவல்துறையினர், சிவா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
சிவாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, கிருஷ்ணகிரி கிளைச்சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)