Advertisment

கால்வாயில் மிதந்த பிஞ்சு குழந்தை... அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்!

 child floating in the canal; Shocked public

Advertisment

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியிலுள்ள உய்யக்கொண்டான் கால்வாயில், பிறந்து சில நாட்களே ஆன குழந்தை இறந்து மிதந்து வந்ததைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தில்லைநகர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து கால்வாயில் மிதந்து வந்த குழந்தையின் உடலை மீட்டனர். அது ஆண் குழந்தையா என்பதை உறுதிப்படுத்திய காவல்துறையினர், உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

baby canal trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe