Advertisment

தந்தையை பார்க்க ஓடிய குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு!

Child falling into water tank to see father

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடசேரி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக். எலக்ட்ரிஷனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார் கார்த்திக்.

Advertisment

ஜீன் 6ந்தேதி கார்த்தியின் ஒன்றரை வயது மகன் பூவை மித்திரன் வீதியில் விளையாடிகொண்டு இருந்துள்ளார். தனது தந்தை பக்கத்து வீட்டில் வேலை செய்வதை பார்த்துவிட்டு மழலை குரலில்அப்பா... அப்பா...என அழைத்துக்கொண்டு புதியதாக கட்டப்படும் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளது. அப்போது அங்கு புதியதாக அமைக்கப்பட்டு இரும்பு தகரம் கொண்டு மூடப்பட்டுயிருந்த தண்ணீர் தொட்டி மீது நடக்க அந்த தகர கதவு விலகி குழந்தை தொட்டிக்குள் விழுந்துள்ளது. அதில் ஏற்கனவே தண்ணீர் இருந்ததால் குழந்தை தண்ணீரில் மூழ்கி உள்ளது. குழந்தை தொட்டிக்குள் விழுந்ததை பார்த்து கார்த்திக் வேகமாக தொட்டிக்குள் இறங்கி குழந்தையை மீட்டு அங்கிருந்து வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Advertisment

Child falling into water tank to see father

இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிந்து அவர்கள் வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ambur incident thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe