Advertisment

14 மணிநேரத்துக்கு மேலாக நீடிக்கும் மீட்புப் பணி...

நாமக்கல் ஐஐடி குழுவினர் திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தொய்வுற்றதை அடுத்து புதுக்கோட்டையிலிருந்து வீரமணி என்பவர் தலைமையிலான குழுவின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

Advertisment

ss

மீட்புக்குழுகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேரில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். குழந்தை சுஜித் தற்போது 27 அடியிலிருந்து 70 அடிக்கும் கீழே சென்றுள்ள தகவலும் கிடைத்துள்ளது. 70 அடி ஆழத்தில் இருப்பதால் குழந்தை அழுகின்ற சத்தம் கேட்கவில்லை, இருந்தாலும் குழந்தைக்கு சீராக ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது.

நேற்று மாலை 5:40 மணியளவில் குழந்தை சுஜித் ஆழ்துளாய் கிணற்றில் விழுந்த நிலையிலிருந்து தற்போது 14 மணிநேரமாக மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

Advertisment

குழந்தை மீட்கப்பட்டவுடன் முதலுதவி செய்வதற்காக சம்பவ இடத்திற்கு அருகிலேயே ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

bore well sujith trichy
இதையும் படியுங்கள்
Subscribe