Skip to main content

தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

 

nn

 

சென்னையில் பக்கெட் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை விருகம்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் என்பவரின் ஒரு வயது குழந்தை இளமாறன் கழிவறை படிக்கட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது தவறி குழந்தை பக்கெட் உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தை மயங்கிய நிலையில் பக்கெட் உள்ளே கிடப்பதைக் கண்ட இளமாறனின் தாயார் உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. பக்கெட் நீரில் குழந்தைகள் இதுபோன்று மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் தொடர்கதையாக நிகழ்ந்து வந்த நிலையில் தற்போது இந்த சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !