A child born to a woman who survived the flood; Kanimozhi fulfilled the wish of the family

Advertisment

சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் பொழிந்த அதீத கன மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. தற்பொழுது படிப்படியாக மீண்டு வருகிறது.

தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை படகுகள் மூலம் மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார். தூத்துக்குடி ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கொற்கை கிராமத்தில் கர்ப்பிணி பெண் அபிஷாவின்வீட்டை மழை நீர் சூழ்ந்து கொண்டது. அப்பொழுது திமுக எம்பி கனிமொழி முயற்சியால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் அபிஷாவிற்கு அன்று இரவே பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தாயையும் குழந்தையையும் நேரில் சந்தித்த கனிமொழி குழந்தையை கைகளில் வாங்கி கொஞ்சினார். அப்பொழுது பெற்றோர்களின் ஆசைப்படி குழந்தைக்கு 'கனிமொழி' என பெயர் சூட்டினார்.