Advertisment

சிறுவன் கடத்தல் வழக்கு; விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி

a4089

Child abduction case; CBCID begins investigation Photograph: (thiruvallur)

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள 16 வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் விவகாரத்தில் அந்த சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு சிபிஐ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று முதற்கட்ட விசாரணையை சிபிசிஐடி தொடங்கியுள்ளது. திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் எஃப் ஐ ஆர் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடத்தல், வீட்டில் அத்துமீறி நுழைதல், பணத்திற்காக ஆட்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இரண்டு தரப்பு குடும்ப உறுப்பினர்களுக்கும் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து தடயங்களை சேகரிப்பதோடு, ஏடிஜிபி ஜெயராமுக்கு சம்மன் அனுப்பி அவரையும் விசாரணைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ADGP CBCID Investigation suprem court TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe