இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒருவயது பெண் குழந்தைக்கு நடத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது லோனி கள்போர் ரயில் நிலையம். இந்த பகுதியில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு தம்பதியினர் சாலையோரம் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 1 வயது குழந்தையும் உள்ளது. இவர்கள் நேற்று இரவு வழக்கம்போல் சாலையோரத்தில் குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது நள்ளிரவில், குழந்தையின் தாய் திடீரென முழித்து பார்த்த போது அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அருகில் உள்ள அனைத்து இடங்களில் குழந்தையை தேடி அழைந்துள்ளனர் எங்கும் கிடைக்கவில்லை.
இதன்பின், விரக்தி அடைந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகாரை ஏற்ற காவல்துறை உடனடியாக குழந்தையை தேடி விசாரணையை மேற்கொண்டது. சம்பவம் நடந்து 4 மணி நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தூங்கிகொண்டிருந்த குழந்தையை கடத்தியவரை உடனடியாக கைது செய்தனர். விசாரணையில் குழந்தையை கடத்தியவர் மல்ஹரி பன்சோடே (65) என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் நடந்த மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் தலை பயங்கரமாக அடித்து நொறுக்கபட்டு இருப்பதும், கொலை செய்வதற்கு முன்பு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
இதையடுத்து குற்றவாளி பன்சோடே காவல்துறை கைது செய்யப்பட்டு போக்ஸோ சட்டதில் 4,8(G), 366 (கடத்தல்), 376 (வன்கொடுமை), 302 (கொலை) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.