/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_259.jpg)
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சிறந்த புகைப்படங்களுக்கு பாராட்டுக்களும், விருதுகளும் கொடுக்கப்பட்டு வருகின்றனர். சிலர் தனக்குப் பிடித்தவற்றைப் புகைப்படமாக எடுத்து உலக புகைப்பட தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் புகைப்பட கலைஞர்களுக்குப் பலரும் நேரிலோ அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவோ தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்களைப் புகைப்படம் எடுத்து தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மேலும் அதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)