கரோனா பரவிவரும் நிலையில் ரமலான் நோன்பு குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன், தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

 Chief Secretary's meeting on Ramadan fasting

ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும்நிலையில், ரமலான் நோன்பு இந்தமாதத்திலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் நிலையில், ரமலான் நோன்பை எப்படி பாதுகாப்பாக கடைபிடிப்பது என்பது குறித்து இஸ்லாமிய அமைப்புகளுடன், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில், ரமலான் நோன்பு குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன் பேசி, ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த ஆலோசனைக் கூட்டமானதுநடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.