Advertisment

"திட்டங்களின் நிலை... ஆளுநரிடம் சமர்ப்பிக்க தயாராகுக" - தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்!

publive-image

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் நிலை குறித்த விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்கத் தயாராக இருக்குமாறு அனைத்து அரசுத் துறைச் செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு எழுதிய கடிதத்தில், "மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறைச் செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆளுநருக்கு இவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆளுநரிடம் விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேதி மற்றும் நேரம் பின்னர் தெரியப்படுத்தப்படும். பவர் பாயிண்டில் விவரங்களைத் தயார் செய்து வைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

Advertisment

தலைமைச் செயலாளரின் கடிதத்தால் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chief Secretary iraianbu Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe